இன்றைய முக்கிய செய்திகள் (மார்ச் 21, 2026) News@10:00am #BREAKING #TAMILNEWS

today-march-21-2026-top-news-10-00am-in-tamil-topnewstamil
Latest News

மார்ச் 21, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ரம்ஜான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

இஸ்​லாமியர்​களின் முக்​கியப் பண்டிகை​யான ரம்ஜான் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர், முதல்​வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் "இந்த புனித நாள் அனை​வருக்​கும் நல்ல ஆரோக்​கி​யம், மகிழ்ச்சி மற்​றும் வளமை அளிக்​க" வாழ்த்து தெரி​வித்​தனர்.

புதுச்​சேரி NDA கூட்​ட​ணி: நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது!

புதுச்​சேரி NDA கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு கடந்த ஒரு வார​மாக இழுபறி​யாக இருந்த நிலை​யில், என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்​பாடு ஏற்​பட்​டது. அதன்படி என்​.ஆர்​.​காங்​கிரஸ் 16 இடங்​கள், பாஜக 10 இடங்​கள், அதிமுக, லஜக தலா 2 இடங்​களில் போட்​டி​யிடுகின்றன.

பிரீமியம் பெட்ரோலின் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் காரணமாக பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்​தப்​படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலை​யில் எந்த மாற்றமும் இல்லை.

முதல் நாளிலேயே ரூ.240 கோடி வசூல்: துரந்தர் 2 சாதனை!

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம், முதல் நாளிலேயே ரூ.240 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.145 கோடி நிகர வசூலைப் பெற்று இந்தியாவில் ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உருவானது புதிய கூட்டணி:

திருமதி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும், திரு ராமதாஸ் தலைமையிலான பாமகவும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். நேற்று இருவரும் கூட்டாக தைலாபுரத் தோட்ட இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதை உறுதிப்படுத்தினார்.

பியூஷ் கோயல் சென்னை வருகை ஒத்திவைப்பு!

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருவது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL TO NEXT ARTICLE