இன்றைய முக்கிய செய்திகள் (மார்ச் 23, 2026) News@09:00am #BREAKING #TAMILNEWS

today-march-23-2026-top-news-09-00pm-in-tamil-topnewstamil
Latest News

மார்ச் 23, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்: 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!
மத்திய கிழக்கு பகைமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா - ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தங்கம் விலை ரூ.7,600 வீழ்ச்சி: ஒரே நாளில் இரு முறை சரிவு!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.670 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.280 குறைந்து ஒரு கிராம் ரூ.12,670 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,01,360 ஆகவும் விற்பனையாகிறது. அதாவது, இன்று ஒரே நாளில் ரூ.7,600 சரிந்துள்ளது. வெள்ளியின் விலை காலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையாகிறது.

53 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கச்சா எண்ணெய் கையிருப்பு: மக்களவையில் பிரதமர் மோடி தகவல்!
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும், 41 நாடுகளிலிருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதியில் ஈடுபடுவதாகவும் மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரூ.151.93 கோடி பறிமுதல்: தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி தகவல்!
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் இன்று வரை உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.151.93 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.


NDA தொகுதிப் பங்கீடு நிறைவு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
கூட்டணியின் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நிறைவடைந்ததாக NDA அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பாஜக 27, பாமக 18, அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 178 தொகுதிகளில், மற்ற கட்சிகளுக்கு 10 முதல் 13 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கு: போலீசார் 9 பேரும் குற்றவாளிகள்!
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முத்துக்குமரன் இன்று தீர்ப்பு அளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி: 1 மணிநேரத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு!
இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ், நிப்டி இன்று காலை கடும் சரிவை சந்தித்ததால், வர்த்தகம் துவங்கிய ஒரு மணிநேரத்தில், முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தை துவங்கிய ஒரு மணிநேரத்தில் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.429 லட்சம் கோடியிலிருந்து ரூ.415 லட்சம் கோடியாகக் குறைந்தது.

SCROLL TO NEXT ARTICLE