இன்றைய காலை முக்கியச் செய்திகள் (மார்ச் 30, 2026) #BREAKING #TAMILNEWS

top-news-today-march-30-2026-morning
Latest News

மார்ச் 30, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்: இன்று தொடங்குகிறது!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், முதல் நாளான இன்றே மனுதாக்கல் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையொட்டி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
-----------------------------------

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி திமுக தேர்​தல் அறிக்​கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளி​யிட்​டார். வரு​மான வரி செலுத்​தாத குடும்​பத்தை சேர்ந்த இல்​லத்​தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்​ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோக பொருட்​கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்​பில் கூப்​பன் வழங்​கும் 'இல்​லத்​தரசி' திட்​டம் உள்ளிட்ட பலவற்றை அறி​வித்​துள்​ளார்.

-----------------------------------
லாக்-டவுனுக்கு வாய்ப்பே இல்லை: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்!

அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "சர்வதேச அளவில் எரிபொருள் சார்ந்த நெருக்கடி நிலை இருந்த போதும் நம் தேசம் முழுவதும் நிலைமை சீராக உள்ளது என்றும் லாக்-டவுனுக்கு வாய்ப்பே இல்லை" என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

-----------------------------------
மக்கள் ஆசியுடன் கேரளாவில் பாஜக ஆட்​சி: பிரதமர் மோடி உறுதி!

கேரள மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்கி வரும் சூழலில், பாலக்​காட்​டில் நேற்று நடை​பெற்ற பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில் பேசிய பிரதமர் மோடி "கேரள மாநில அரசி​யலில் புதிய மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது என்றும் அனைத்​துத் தரப்​பினரும் பாஜக மற்​றும் என்​டிஏகூட்​ட​ணி​யின் மீது மிகுந்த நம்​பிக்கை கொண்​டுள்​ளனர் என்றும் தொண்​டர்​களின் அயராத உழைப்​பு, அவர்​களின் தியாகம் மற்​றும் மக்​களின் ஆசி ஆகிய​வற்​றின் மூலமே கேரளத்​தில் இந்த மாற்​றம் சாத்​தி​ய​மாகி​யுள்​ளது" என்றும் தெரிவித்தார்.

-----------------------------------
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 234 தொகுதிகளுக்குமான தவெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அவர்களை அறிமுகப்படுத்தினார் தவெக தலைவர் விஜய். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

-----------------------------------
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு விலை உயர்வு!

காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால், கள்​ளச்​சந்​தை​யில் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர்​களை பல ஆயிரம் ரூபாய் கூடு​தலாகக் கொடுத்து வாங்​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஓட்​டல்​களில் தேநீர், சிற்​றுண்​டி, சாப்​பாடு உள்​ளிட்​ட​வற்​றின் விலை கணிச​மாக அதி​கரித்​துள்​ளது.

-----------------------------------
ஐபிஎல் 2026: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 14 ஆண்டுகால நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

SCROLL TO NEXT ARTICLE