இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
தொகுதி மறுவரையறை மசோதா இன்று தாக்கல்: இண்டியா கூட்டணி எதிர்ப்பு!
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது. மகளிர் இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவிக்கும் இண்டியா கூட்டணிக் கட்சிகள், தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஈரானை சரணடைய வைக்க முடியாது: ஈரான் அதிபர் திட்டவட்டம்!
ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் கூறினார். இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா: திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள்: 93.70% பேர் தேர்ச்சி!
சிபிஎஸ்இ கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பாடத் திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. இதில் தேர்வு எழுதிய 93.7 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2025-ம் ஆண்டைவிட 0.04 சதவீதம் அதிகம்.
பயணிகள் சேவை, வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம்: ரூ.8,271 கோடி வருவாய்!
கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேயில் பயணிகள் சேவை மற்றும் வருவாயில் தெற்கு ரயில்வே ரூ.8,271 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.736 கோடி அதிகமாகும்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்பு: எஸ்&பி அறிக்கை!
இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டாலராக உயர்ந்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறையும் என எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லக்னோவை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது ஆர்சிபி!
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் தொடரில் நேற்று பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதலிடத்துக்கு முன்னேறியது.