இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 22, 2026) #BREAKING #TAMILNEWS

today-latest-news-in-tamil-april-22-2026-top-news-tamil
Latest News

இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை(23-ஏப்ரல்) காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவ படைகள் குவிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​தத் தேர்​தலில் மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

----------------------------------------------
அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் முழுவதும் குண்டு மழை பொழியும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

இஸ்​லா​மா​பாத்​தில் நடைபெற்ற பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​ததையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இந்நிலையில் போர்நிறுத்​தம் இன்​று நிறைவடையும் நிலையில் அமெரிக்கா​வுடன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளா​விட்​டால், ஈரானில் குண்டு மழை பொழி​யும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

----------------------------------------------
ஹார்முஸ் ஜலசந்தியில் 14 இந்திய கப்பல்கள்: பத்திரமாக வெளியேற்ற அரசு தீவிரம்!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய 14 கப்பல்கள் சிக்கியுள்ளன. இவற்றில் மூன்று பெரிய எண்ணெய் கப்பல்களும், ஒரு பெரிய எல்பிஜி கப்பலும் அடங்கும். இந்த கப்பல்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

----------------------------------------------
மேற்கு வங்க முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு: 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு!

மேற்​கு​ வங்​கத்​தில் மொத்​தம் உள்ள 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது. முதல்​கட்​டத்​தில் 152 தொகு​தி​களுக்கு நாளை வாக்​குப்​ப​திவு நடத்​தப்பட உள்​ளது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை​யுடன் தேர்​தல் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது.

----------------------------------------------
எம்.பி.க்களை அவதூறாகப் பேசினார் பிரதமர் மோடி: சபாநாயகரிடம் நோட்டீஸ்!

ஏப்​ரல் 17-ம் தேதி மக்​களவை​யில் அரசி​யலமைப்பு 131-வது திருத்​த மசோ​தா, 2026 தோற்​கடிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து ஏப்​ரல் 18-ம் தேதி பிரதமர் மோடி தொலைக்​காட்​சி​யில் நாட்டு மக்​களுக்கு ஆற்றிய உரை​யில், மசோ​தா​வைத் தடுத்​த​தாகக் கூறி எதிர்க்​கட்சி எம்​.பி.க்​களைப் பிரதமர் மோடி அவதூறாகப் பேசி​யுள்​ளார் என்றும் எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று காங்​கிரஸ் சார்​பில் மக்​களவை சபா​நாயகரிடம் உரிமை மீறல் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது.

----------------------------------------------
இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்!

ஐக்​கிய நாடு​கள் சபை​யின் ஆசியா மற்​றும் பசிபிக் நாடு​களுக்​கான பொருளா​தார மற்​றும் சமூக ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள ஆய்​வறிக்​கை​யில், 2025-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.4 சதவீத​மாக இருந்தது என்றும் உலக நாடுகளில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அமெரிக்கா வரி விதிப்பு போன்ற காரணங்களால் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி நடப்​பாண்​டில் 6.4 சதவீத​மாக​வும், அடுத்த ஆண்​டில் 6.6 சதவீத​மாக​வும் இருக்​கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

----------------------------------------------
டெல்லியை 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்: ஐபிஎல் 2026!

உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற, ஐபிஎல் 2026 தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. 243 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

SCROLL TO NEXT ARTICLE