இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 30, 2026) #BREAKING #TAMILNEWS

today-latest-news-in-tamil-april-30-2026-top-news-tamil
Latest News

இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

“இனியும் நல்லவராக இருக்க முடியாது”: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

போர் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரானின் நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சமீபத்தில் தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ‘இனியும் நல்லவராக இருக்க முடியாது’ என்ற வாசகத்துடன் குண்டுகள் வெடிக்கும் பின்னணியில், கையில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

----------------------------
S-400 பாதுகாப்பு கவச வாகனம்: இந்தியாவிடம் ஒப்படைத்த ரஷ்யா!

ரஷ்​யா​விடம் இருந்து 5 அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு கவச வாக​னம் வாங்க கடந்த 2018-ல் மத்​திய அரசு ஒப்பந்தம் செய்​தது. இதன்​படி 3 பாது​காப்பு கவசங்​கள் இந்தி​யா​விடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட நிலையில் 4-வது எஸ்​-400 வான் பாதுகாப்பு கவச வாக​னத்தை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. இவை பாகிஸ்தான், சீன எல்லைப் பகு​தி​களில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன.

----------------------------
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் ஆளும் கட்சிகளுக்கே வாய்ப்பு!

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்​தைப் பொறுத்​தவரை பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தொடரும் என்றும், புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்சி தொடரும் என்றும் பல்வேறு நிறு​வனங்​களின் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

----------------------------
சான்றிதழ் வெற்று விளம்பரத்துக்கே பயன்படும்: பார்த்திபன் வழக்கில் ஐகோர்ட் கருத்து!

சாதி, மதமற்றவர் என்பதை மன​தார பின்​பற்றி நடத்தை மூல​மாக வெளிப்​படுத்​தி​னாலே போதும். அதற்கு சான்​றிதழ் அவசி​யம் இல்லை எனவும், அவ்​வாறு சான்​றிதழ் வழங்​கி​னால் அது வெற்று விளம்​பரத்​துக்​குத்​தான் பயன்​படும் எனவும் நடிகர் பார்த்​திபன் தொடர்ந்த வழக்​கில் உயர் நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது.
----------------------------

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: மத்திய அரசுக்கு விமான நிறுவனங்கள் கடிதம்!

போர்ச் சூழல் காரண​மாக, விமான எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்​துள்​ளது. இது தொடர்பாக ஏர் இந்​தி​யா, இண்​டிகோ உள்ளிட்ட இந்​திய விமான நிறுவனங்களின் கூட்​டமைப்பு சார்பாக எழுதியுள்ள கடிதத்தில் "சேவை​களைத் தொடர்ந்து தொய்​வின்றி வழங்​க மத்​திய அரசு உடனடி​யாக நிதி ரீதியி​லான ஆதரவை வழங்க வேண்​டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
----------------------------

அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,034 கோடி சொத்து முடக்கம்!

அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மீதான வங்கி மோசடி மற்றும் நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.19,344 கோடி மதிப்புள்ள சொத்துகளை இதுவரை முடக்கியுள்ள அமலாக்கத் துறை, மேலும் ரூ.3,034 கோடி சொத்துகளை முடக்கியுள்ளது.

----------------------------
மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்: ரிக்கல்டன் அபார சதம்!

வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

SCROLL TO NEXT ARTICLE