விசில் புரட்சி: திமுக ஆட்சியை வீழ்த்தி, தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்!

the-whistle-revolution-vijay-topples-the-dmk-government-and-becomes-the-chief-minister-of-tamil-nadu
Latest News

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வரலாறு காணாத வகையில் அதிக தொகுதிகளில் (108 தொகுதிகள்) வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பினை பெற்று தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார் விஜய். இது தமிழகம் மட்டுமன்றி இந்திய அரசியலில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது.

இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களான கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறையாக வெற்றி பெற்றிருந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எடப்பாடி தொகுதியில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். காரைக்குடியில் போட்டியிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

தமிழகத்தில் 1967-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு, அன்று முதல் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில் இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக பாமக, மதிமுக, தேமுதிக, மநீம போன்ற கட்சிகள் தோன்றின. ஆனால் அவைகளும் பின்னாளில் இந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளன. சீமானின் நாதக யாருடனும் கூட்டணி அமைக்காவிட்டாலும், இதுவரை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் போராடி வருகிறது.

இந்தச் சூழலில் திரைத் துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய விஜய் கடந்த 2024 பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி நேரடி அரசியலுக்குள் நுழைந்தார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தான் தன் இலக்கு என்றும், கூட்டணி ஆட்சிக்கும் அப்போதே அழைப்பு விடுத்தார். ஆனால் சரியான கூட்டணி அமையாத நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கினார் விஜய்.

ஆரம்பம் முதலே பல்வேறு முனை தாக்குதல்கள், அரசியல் விமர்சனங்கள் தாண்டி தனிமனித விமர்சங்கள் , கரூர் சம்பவம் போன்ற பல்வேறு கட்ட நெருக்கடிகளை தாண்டி குறுகிய காலத்திலேயே மீண்டெழுந்த விஜய், அதிகாரத் தடைகளை எல்லாம் தகர்த்து தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தை நடத்தினார். எண்ணற்ற எதிர்மறை விசர்சனங்கள் சமூக ஊடகத்தில் சிலரால் பரப்பப்பட்ட நிலையில், அதனை எல்லாம் புறக்கணித்து விட்டு அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு இளைஞர்களும், பெண்களும் அலைகடலென புறப்பட்டு வந்தனர். இதை பார்த்து ஆளும் தரப்பு மட்டுமன்றி அரசியல் களத்தில் உள்ள அனைவருமே சற்று மிரண்டனர்.

திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவியது. ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொருமாதிரியான வேட்பாளர் தேர்வு இருக்கும் நிலையில் தவெக -வில் கட்சியின் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் போன்ற அனைத்தையும் புறம் தள்ளி, விஜய் என்ற ஒற்றை பிம்பம் மட்டுமே மக்களுக்கு பிடித்ததால் பெரும்பாலான தொகுதிகளிலும் சாமானியர்களையே வேட்பாளராக அறிவித்தார் விஜய். பிரதானக் கட்சிகள் ஒரு ஓட்டுக்கு பல ஆயிரங்களை செலவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர்கள் பலரும் பிரச்சாரத்துக்குகூட செலவிட முடியாதவர்களாக இருந்தனர். வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தவெக-வுக்கு தோல்வி பாடமே எடுத்தன.

ஆனால் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்து வந்த தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

விஜய்​யின் அடுத்த நகர்வு என்ன?

விஜய்​யின் தவெக 108 இடங்​களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக இருந்தாலும் மெஜாரிட்டி ஆட்​சிக்குத் தேவை​யான 118 இடங்​கள் தவெக-வுக்கு கிடைக்காத நிலையில் விஜய்​யின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்த பேச்சுக்கள் பரபரப்பை உண்டாகியுள்ளன. தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார். ஆட்சி அமைக்க இன்​னும் 10 இடங்​கள் தேவைப்​படு​வ​தால், கட்​சிகளிடம் ஆதரவு கோரு​வது குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் தீவிர ஆலோசனை​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

SCROLL TO NEXT ARTICLE