இன்றைய முக்கிய செய்திகள் (மே 06, 2026) #BREAKING #TAMILNEWS

today-latest-news-in-tamil-may-06-2026-top-news-tamil
Latest News

மே 06, 2026: இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

நாளை பதவியேற்கிறார் விஜய்: நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்!

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்றுள்ள தவெக ஆட்​சி​யமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ள நிலையில், ஆளுநர் அனுமதியின் பேரில் முதல்​வ​ராக விஜய் நாளை பதவி​யேற்க உள்​ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்புக்கான ஏற்பாடுகள் சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் பிரம்​மாண்​ட​மாக நடந்து வரு​கின்றன. அவருடன் செங்கோட்டையன், ஜேசிடி. பிர​பாகர், ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா உள்ளிட்டோரும் அமைச்​சர்​களாக பதவி​யேற்க உள்​ளனர்.

----------------------------
முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து: மாதம் 200 யூனிட் இலவச மின்​சா​ரம், வெற்​றிப் பயணம் ?

முதல்​வ​ராக நாளை பதவி​யேற்​கும் விஜய், ‘‘தகு​தி​யுள்ள வீடு​களுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்​சா​ரம், நகரப் பேருந்​துகள் மட்​டுமின்​றி, மாநிலம் முழு​வதும் இயங்​கும் அனைத்து அரசுப் பேருந்​துகளி​லும் பெண்​கள் கட்​ட​ணமின்றி பயணிக்​கும் வகை​யில் ‘வெற்​றிப் பயணம்’ திட்​டம்' ஆகிய 2 முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் முதல் கையெழுத்​திடு​வார் என்று கூறப்​படு​கிறது.

----------------------------
மேற்கு வங்கம், அசாம் முதல்வர்கள் தேர்வு: பார்வையாளர்களாக அமித் ஷா, நட்டா நியமனம்!

மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கி உள்ளது. முதல்வர்களை தேர்ந்தெடுக்க மத்திய பார்வையாளர்களாக அமித் ஷா மற்றும் நட்டாஆகியோரை பாஜக நியமித்துள்ளது.

----------------------------
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தலில் நாங்​கள் தோல்வி அடைய​வில்​லை மாறாக எங்​கள் வெற்றி களவாடப்பட்டுள்ளது என்றும் நான் ராஜி​னாமா செய்​யப் போவ​தில்லை என்றும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மம்தா பானர்ஜி நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​து தெரிவித்துள்ளார்.

----------------------------
புதிய அரசு பதவியேற்பு: தலைமைச் செயலாளர், டிஜிபி, அதிகாரிகள் ஆலோசனை!

தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் பங்கேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

----------------------------
பி.எப். ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி தற்போது ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக உள்ளது. இத்தொகை ரூ.7,500 ஆக உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

----------------------------
டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே:

அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

SCROLL TO NEXT ARTICLE