• 02:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

ஆண்டாள் திருப்பாவை பாடல் 19 (மார்கழி 19-ம் நாள்): கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாயா?

andal-thirupavai-19-margazhi-19-thiruppavai-in-tamil
Spiritual

ஆண்டாள் திருப்பாவை 19:

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்!

பொருள்: "குத்து விளக்கு எரிய, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில் மேல் விரிக்கப்பட்டுள்ள மிருதுவான பஞ்சு மெத்தையில், அதனினும் மென்மையான விரிந்த கொத்து பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து தூங்கிக்கொண்டிருக்கும் மலர் மாலை அணிந்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக... மை பூசிய கண்களையுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை இவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாயா?. இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு ஏற்குமோ?" என்று ஆண்டாள் நாச்சியார் கண்ணனை எழுப்புமாறு வேண்டுகிறாள்!"

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

SCROLL TO NEXT ARTICLE