• 03:30 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

ஆண்டாள் திருப்பாவை பாடல் 21 (மார்கழி 21 - ம் நாள்): மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்!

andal-thirupavai-21-margazhi-21-thiruppavai-in-tamil
Spiritual

ஆண்டாள் திருப்பாவை 21:

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!

பொருள்: "கறக்கும் போதெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் அளவுக்கு பாலைச் சுரக்கும் வள்ளல் குணமுடைய பசுக்களுக்கு சொந்தக்காரனாக நந்தகோபனின் மகனே! கண்ணனே! வேதங்களால் போற்றி பாடப்படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளி காட்டும் சுடரே! உன் எதிரிகள் தங்கள் வலிமையிழந்து உன் பாதத்தில் சரணடைய உன் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று நீ துயில் எழுவாயாக! " என்று ஆண்டாள் நாச்சியார் கண்ணனை துயில் எழுப்புகிறாள்!"

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

SCROLL TO NEXT ARTICLE