• 02:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

ஆண்டாள் திருப்பாவை பாடல் 22 (மார்கழி 22 - ம் நாள்): திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்!

andal-thirupavai-22-margazhi-22-thiruppavai-in-tamil
Spiritual

ஆண்டாள் திருப்பாவை 22:

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!

பொருள்: "கண்ணா! தானே மாமன்னன் என்று இறுமாப்பில் இருந்த அரசர்கள் கூட, உன் பெருமையின் முன்னர் தங்கள் கர்வம் தொலைந்து போக, மிகப் பணிவுடன் உன்னைக் காண இங்கு வந்து நீ பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும் கூடி இருப்பதைப் போல் நாங்களும் இங்கே கூடி நிற்கின்றோம்! எங்கள் மேல், கிண்கிணி (சதங்கை) போல் தோன்றும் உன் தாமரைப் பூ போன்ற சிவந்த திருக்கண்களை இன்னும் சிறிது சிறிதாகத் திறந்து நோக்காதா? சந்திரனும் சூரியனும் ஒரே நேரத்தில் உதித்ததைப் போல் உன் அழகிய திருக்கண்களால் எங்களை நீ பார்த்தால் எங்கள் எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே! " என்று ஆண்டாள் நாச்சியார் கண்ணனை துயில் எழுப்புகிறாள்!"

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

SCROLL TO NEXT ARTICLE