• 03:30 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

ஆண்டாள் திருப்பாவை பாடல் 23 (மார்கழி 23 - ம் நாள்): காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

andal-thirupavai-23-margazhi-23-thiruppavai-in-tamil
Spiritual

ஆண்டாள் திருப்பாவை 23:

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

பொருள்: "மழை எப்போதும் பெய்து கொண்டிருக்கும் மலை குகையில் இருக்கும் பெருமை வாய்ந்த சிங்கம், தனது உறக்கத்தை விட்டு தீப்பிழம்பு போல் விழித்து எழுந்து, பிடரி மயிர் பொங்க எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு, உடலை நிமிர்த்தி, கர்ஜனை செய்து புறப்பட்டு வரும் அந்த சிங்கத்தைப் போலே பூவைப் பூவண்ணனே கண்ணா! நீயும் நின் அரண்மனையை விட்டு எழுந்து வந்து பெருமையும் கம்பீரமும் வாய்ந்த உன் அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு நாங்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்து, ஆராந்து எங்களுக்கு தேவையான அருள் செய்ய வேண்டும்!"

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

SCROLL TO NEXT ARTICLE