• 02:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

ஆண்டாள் திருப்பாவை பாடல் 30 (மார்கழி 30 - ம் நாள்): எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்!

andal-thirupavai-30-margazhi-30-thiruppavai-in-tamil
Spiritual

ஆண்டாள் திருப்பாவை 30:

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!

பொருள்: "பாற்கடலை கடைய கூர்மாவதாரம் எடுத்த மாதவனும், ஓயாத அலைகளையுடைய பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனும், கேசி என்ற அசுரனை வதம் செய்த கேசவனுமான கண்ணனிடம் நிலவு போன்ற அழகிய திருமுகத்தையுடைய ஆயர்குலப் பெண்கள் அவர்கள் பாவை நோன்புக்கான அருளை பெற்றனர். இதைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில் பிறந்த நம்மாழ்வாரின் மகளான கோதை அழகிய தமிழால் தொடுத்துள்ள இந்த 30 பாடல்களை கொண்ட தமிழ் பாமாலையை பாடுபவர்களுக்கு, அழகிய இரு தோள்களை உடையவனும், அழகிய சிவந்த கண்களை உடையவனும், செல்வத்திற்கு அதிபதியுமான திருமாலின் அனைத்து விதமான செல்வங்களும், இறையருளும் கிடைக்கப்பெற்று எப்போதும் இன்பமாக வாழும் வாழ்க்கை அமையும் என்பது நிச்சயம்.!"

நாமும் ஆண்டாள் சொன்ன இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள் !!! வாழ்க வளமுடன்.

SCROLL TO NEXT ARTICLE