12-June-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-12-june-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், வைகாசி மாதம் 29 ம் நாள்,

2026, ஜூன் 12 ம் நாள், வெள்ளி


சூரிய உதயம்: காலை 05:52


இன்றைய நட்சத்திரம்: அதிகாலை 03:08 AM வரை அஸ்வினி பின்பு பரணி

சந்திராஷ்டமம்: அஸ்தம் சித்திரை

சூலம்: மேற்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30

மாலை:
04:30 - 05:30

இராகு காலம்:
காலை 10.30 - 12.00

எமகண்டம்:
மாலை 03.00 - 04.30


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தில் நமது கடமைகளை உணர முடியும். நிதி நிலையில் ஏற்ற, இறக்கம் இருக்கும். தொடர் வேலையால் சோர்வு, மன அழுத்தம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தாமதமான காரியங்கள் கூட வேகமாக முடிவடையும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்

மிதுன ராசி அன்பர்களே,நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் கைகூடி வரும். பொருளாதார நெருக்கடி சீரடையும். பெரியோர்கள் பாச மழை பொழிவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே, இனிமையான நினைவுகள் மனதிற்குப் புத்துணர்ச்சி தரும். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்ம ராசி நேயர்களே,எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே, சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். கோபத்தை எங்கையும் வெளிப்படுத்த வேண்டாம். கேரண்டர் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்திற்காக தனியாக நேரம் ஒதுக்கவும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். யாரையும் நம்பி உறுதி மொழி தர வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

விருச்சிக ராசி நேயர்களே,புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். சேமிப்புகள் உயர வாய்ப்புண்டு. அடிக்கடி செல்லும் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்

தனுசு ராசி நேயர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபாடு வரும். விரக்தி மனப்பான்மை எண்ணம் நீங்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மகர ராசி நேயர்களே, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். உடனிருப்பவர்கள். உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்ப ராசி நேயர்களே,நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். உற்றார், உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவர். இழுபறியாக இருந்த வேலைகள் ஓர் முடிவிற்கு வரும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

மீன ராசி நேயர்களே,


இன்றைய சிறப்பு:

பிரதோஷம்,

ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE